கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் அரசல் ஆற்றின் தென்கரையில் அமைந்திருப்பது எயிணனூர் என்கிற ஏன நல்லூர். தமிழரசர்களின் சேனைத் தலைவர்கள் ஏனாதியர் எனப்பட்டனர்.
தூங்காமை, கல்வி, துணிவு உடைமை கொண்டு, அறன் இழக்காது, அல்லவை நீக்கி போர் முறையில் பெருமித மானத்தைக் பெரிதாகப் போற்றி வாழ்ந்தவரிவர். அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் அனைத்தையும் இயல்பாகக் கொண்டவர். ஒரு செயலை நிறைவேற்ற உரிய கருவி, அதற்கு ஏற்ற காலம், செய்யும் செயல் முறை, மேற்கொள்ளும் செயல் திறன் இவைகளை சீராக நன்கு திட்டமிட்டு முனைபவரிவர். மரபுவழி வல்லமை வாய்ந்தவர்.
கும்பகோணத்திற்கு தென்கிழக்கில் அரசல் ஆற்றின் தென்கரையில் அமைந்திருப்பது எயிணனூர் என்கிற ஏன நல்லூர். தமிழரசர்களின் சேனைத் தலைவர்கள் ஏனாதியர் எனப்பட்டனர். அரசர்கள், ஏனாதியர்கட்கு, நெற்றியில் அணியும் தங்க பட்டமும், கை விரல்களுக்கு மோதிரங்கள் அளித்து, கவுரவப்படுத்துவதை, மரபாக பின்பற்றினர்.
அரச வம்சத்தினருக்கு, வாள் பயிற்சி கற்றுக் கொடுக்கும் ஆசானாக விளங்கியவர் ஏனாதிநாதர். அதுவே,தொழிலாகியது. வாள் பயிற்சி பெற நினைக்கும் எவரும், இவரிடமே கற்க விரும்ப காரணம், இவர்தம் நேர்த்தி மற்றும் அணுகுமுறை. மேலும், இவர், சிவனடியார் அனைவரையும் உபசரித்து திருநீற்றுத் தொண்டு புரிவதிலும், வழிபாட்டிலும் நிலைத்து நின்றவர். அதில் பேரன்பு கொண்டியங்கி, மனம் மகிழ்ந்தவர்.
அதே ஊரில், இவரின் தாய் வழி உறவினரான அதிசூரன் என்பவரும் இதே தொழிலை செய்து வந்தார். ஆள் சேராததால் வருவாய் மிக குறைந்து கொண்டே வந்தது. இதனால் அவன் உள்ளத்தில் பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிய, அவன் மனம் குமுற ஆரம்பித்தது.
அதன் பிரதிபலிப்பில் , ஒரு நாள் தன் கூட்டத்தோடு ஏனாதிநாதர் இருக்குமிடம் வந்து, இந்த ஊரில், தான், தொழில் செய்ய வேண்டும் அல்லது அவர் செய்ய வேண்டும், அதனை முடிவு செய்ய போர் புரியலாம். இதில் தோற்பவர் தொழில் செய்யக்கூடாது என்கிற ஒரு நிபந்தனை வைத்தான்.
நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன. ஏனாதிநாதர் போர்க் கோலம் கொண்டு, கச்சை கட்டி, காலில் வீரக் கழல் கட்டி, வாளும் கேடயமும் கையில் எடுத்து, வந்து நிற்க, அவரது வீரம் செறிந்த மாணாக்கர்கள் சேர்ந்து கொள்ள, இரு தரப்பும் ஏனநல்லூர் திருக் கோவிலுக்கு அருகேயுள்ள சாலைக்கரை எனும் பெரிய திடலுக்கு வந்து, போர் ஆரம்பித்தது.
பலவகை இழப்புகள், கஷ்ட நஷ்டங்கள், பாதிப்புகளை உள்ளடக்கிய அந்தப் போர், ஏனாதிநாதர் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது. தோல்வி அடைந்த அதிசூரன் மனது வன்மம் கொண்டு தகித்து, வீரர்களுடன் வெளியேறிப் போனான். தோல்வியில் துவண்டு, அவன் அடுத்து வெற்றி பெற மாற்று வழி தேட ஆரம்பித்தான்.
“அடக்கப் படாமல் உள்ள மனமும், அற வழியில் செலுத்தப்படாத உள்ளமும், நம்மை, எப்பொழுதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்து விடும் என்பது சுவாமி விவேகானந்தர் வாக்கு.
சில நாட்கள் சென்ற பின், ஏனாதிநாதரை, இனிமேல் போரில் வெல்ல முடியாது, சூழ்ச்சியால்தான் வெல்ல முடியும், அவரின் திருநீறு பக்தியை வைத்து ஏதேனும் செய்ய வேண்டும் எனக் கருதி சிவனடியார் வேடத்தில் அவரை சூழ்ச்சி செய்து ஜெயிப்பது என்று முடிவு செய்தான். சிவனடியார் போல , திருநீறு பூசி, அவர்களுடையது போல, நடை, உடைகளை மாற்றிக் கொண்டு நின்றான்.
கூட்டத்தோடு போர் செய்ததால் தான் வெற்றி பெற்றார் என ஏளனமாகப் பேசி, அதிசூரன் ,ஏனாதி நாதரை, ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பி, நாம் இருவரும் மட்டுமே தனியாகப் போர் புரியலாம் நேருக்கு நேர் எனும் முறையில் அழைப்பு விட, அதை நம்பிய ஏனாதிநாதர் போர்க்கோலம் பூண்டு அங்கு சென்றார்.
அவருக்கு முன்பே அதிசூரன் வேடம் அணிந்து வந்து, முகத்தை கேடயத்தால் மறைத்து நின்றான். சூழ்ச்சியை அறியாத ஏனாதிநாதர், தன் வாளைச் சுழற்றிக் கொண்டு, அவனருகில் செல்ல, தீடீரென அவன், கேடயத்தைக் கீழிறக்க, அவனது வெண்திருநீர் அணிந்திருந்த முகம் தெரியக் கண்டார்.
ஏனாதிநாதர் திடுக்கிட்டு, திணறி, பேச்சற்று, திக்கு முக்காடிப் போனார்.
“திருநீறு தாங்கி நிற்கும், இந்த அடியாரைத் தாக்கினால், சிவனையே தாக்கியது போலல்லவா” என, மனம், துணுக்குற்று, தான் கையில்வைத்திருந்த ஆயுதங்களைக் கீழே போட எத்தனிக்க, அவர் மனம், சிந்திக்க நின்றார்.
தாம், ஆயுதங்களைக் கீழே போட்டால், நிராயுதபாணி ஒருவரைக் கொன்ற பாவம் சிவனடியாருக்கு வருதல் கூடாது எனக் கருதி, தாம் கையில் ஆயிதங்களுடனே நின்றிருக்க, இதுவே நமது தருணம் என எண்ணிய அதிசூரன், தம் வாளால், அவரைக் குத்திக் கிழித்துத் தம் பழியைப் தீர்த்துக் கொண்டான்.
வீரம் பக்திக்கு அடிமையானது
“கடையவன் தன் நெற்றியில் வெண்ணீரு
தாங்கக் கண்டார்”
இதுவரை திருநீறு அணியாதவன் நெற்றியில் இன்று திருநீறு கண்டேன் இவர் பரமசிவனுக்கடியார் என்றவாறே தன்நிலை இழந்து விழுந்தார்.
வெண்திருநீறணிந்த, சிவனடியார்களிடம், இவர் கொண்டிருந்த பேரன்பு, திருவெண்ணீற்று பக்தி கண்ட சிவபெருமான் செஞ்சடை மின்னலிட, வெளிப்பட்டுக் காட்சி தந்தார். தமது உலகப் பாசம் அறுத்துக் கொண்ட தமது ஏனாதிநாதரை, ஈசன், தன் அருளால் ஈர்த்து, தன்னுடன் இருக்கும்படியான சிவ பதவியை மனமாற அளித்து மறைந்தார். சிவ சின்னமான விபூதியை, மெய்யன்போடு தரிப்பவர்கள், சிவ பதம் அடைவர் என உலகுக்கு காட்டியவர் இவர்.
“ஏனாதி நாதன் தன்
அடியார்க்கும் அடியேன்”
என்பார் சுந்தரர் தமது திருத்த தொண்டர் தொகையில்.
இவரின் குரு பூஜை புரட்டாசி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் வருகிறது. அரசர்களால் பொற் பூ, பல விருதுகள் பெற்று, போற்று தற்குரிய ,உயரிய பல செயல்கள் செய்து இறைவனடி சேர்ந்த இவரை நினைவில் கொண்டு அதை ஊர் ஜனங்களும், இவரின் நினைவாய் அமைந்த நற்பணி மன்றமும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இவரது பெருமையைப் பறை சாற்றும் விதமாக, அருப்புக் கோட்டை ஐயா, பெ. சிவ.பெருமாள் நாடார் எனும் பெருமகனார்
“ஸ்ரீ மத் ஏனாதிநாத நாயனார் திருமடாலயம்” என்கிற அமைப்பை நிறுவி தொண்டு செய்து வருவது அறிந்து மகிழ்வர்.
“வேடநெறி நில்லார்
வேடம் பூண்டு என்ன பயன்” எனும் திருமூலர் வாக்கின் படி,” சிவனடியார் போல வேடம் பூண்டு அதி சூரன், ஊர் தூற்ற வாழ்ந்து பின்னர் நரகத்தில் துன்புறுவான்” என்று கூறுவார் வாரியார் சுவாமிகள். கற்பஹாம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அங்கு உள்ளது.
விபூதி ஒரு தெய்வீக குணமளிக்கும் விஷயம் என, நமது பல சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிறப்பு, இறப்பு, நோய் உட்பட அனைத்து சுகவீனங்களை நீக்கி, அதை அணிந்த பக்தனுக்கு மோட்சம், அறிவு, உயர்ந்த செல்வம், இவற்றை அருளும் என்பர் நம் முன்னோர்கள்.
மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…
தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…
சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…
ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…