AnmegamHistory's

பஞ்சமி திதியும் வாராகி வழிபாடும்


பஞ்ச பூதங்களையும் தன் வசப்படுத்தி வெற்றியை தரக்கூடிய மிக அற்புதமான சக்திவாய்ந்த தெய்வம்தான் வாராஹித்தாய், இந்த வாராகி தாயை தேய்பிறை பஞ்சமி திதியில் வழிபடுவது அற்புதமான பலன்களை அழைக்கக்கூடிய தன்மை கொண்டது.

சப்த கன்னியர்களில் ஒருவரான வராஹி அம்மன், போருக்கு உரிய தெய்வமாகவும், வெற்றியை தரக் கூடிய தெய்வமாகவும் விளங்கக் கூடியவள். தமிழகத்தில் மட்டுமல்ல ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களிலும், நேபாளத்திலும் வாராஹி வழிபாடு மிகவும் புகழ்பெற்றதாகும்.

இவளை விஷ்ணுவின் வராஹ அவதாரத்தின் பெண் வடிவம் என்றும் சொல்லுவது உண்டு. வைணவர்களும், சைவர்களும் போற்றும் பெண் சக்தியாக வாராஹி அம்மன் விளங்குகிறாள். எதிரிகள் தொல்லை, கடன் தொல்லையில் சிக்கி தவிப்பவர்கள் வராஹியை வழிபடுவது சிறப்பு.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்து வரும் ஐந்தாவது திதி தேய்பிறை பஞ்சமி ஆகும். தேய்பிறை பஞ்சமி வராஹி அம்மனை வழிபட உகந்த நாளாகும். வராஹி எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்புரிய கூடியவள். மேலும், வாராஹியை வழிபடுவதால் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.

அம்பிகையின் படைக்கு படைத்தளபதியாக இருக்கக்கூடிய வராஹி அம்மன், ‘ அளவில்லாத கோபம் கொள்ளக் கூடியவள்.

அதே சமயம் தன்னை நம்பிக்கையுடன் வணங்கும் பக்தர்களுக்கு அளவில்லாத அன்பையும், அருளையும் வாரி வழங்கக் கூடியவள். வராக முகமும், பெண்ணில் உடலும் கொண்டு , பெரிய சக்கரத்தை கரங்களில் கொண்டவள்.

வராஹி அம்மனை வழிபடும் முறை :

எட்டு கரங்களை உடையவள். வராஹி அம்மனை ” வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற நாட்கள் பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை. வராஹி அம்மனை குங்குமம் மற்றும் செந்நிறப் பூக்கள் கொண்ட அர்ச்சிப்பதால் உடனடியாக மனம் குளிர்ந்த நாம் வேண்டும் வரங்களை தரக் கூடியவள். ‘வராஹிக்கு உரிய நிறம் பச்சை என்றும், அவளை போற்றி துதிக்கும் நூல் வராஹி மாலை என்றும் சொல்லப்படுகிறது.

வராஹி அம்மனை வழிபடும் முறை :

வராஹி அம்மன் வழிபாட்டினை மாலை நேரத்தில் தான் செய்ய வேண்டும். மாலை 6.30 மணிக்கு மேல் வராஹி வழிபாட்டை வீட்டில் செய்யலாம். வீட்டில் உள்ள பூஜை அறையை தயார் செய்து விட்டு, வராஹி அன்னையின் திருவுருவப்படத்திற்கு செம்பருத்திப் பூக்கள் வைத்து, வறுமை நீங்க வேண்டும், கடன் சுமை குறைய வேண்டும்,

வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் வராஹி அன்னையின் படம் இல்லை என்றால், மஹாலட்சுமியையே வராஹி தாயாக நினைத்து அவளுக்கு செம்பருத்திப் பூக்களை வைத்து வழிபடலாம்.

செம்பருத்திப் பூ இல்லையெனில், சிவப்பு நிறத்தில் உள்ள பூக்களை பூஜைக்கு பயன்படுத்தலாம். வளர்பிறை பஞ்சமி திதியில், வராஹியை மனதார வழிபடுவதால் தீய சக்திகள் அகலும்.

தோல் நீக்காத பூண்டு கலந்த உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தேன் ஆகியவற்றை வராஹிக்கு படைத்து வழிபடலாம்.



வராஹி அம்மனை வழிபடுவதால் மாங்கல்ய பலமும், வியாபார விருத்தியும் அதிகரிக்கும். நோய் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும். வழக்கு, வீடு, நிலம் போன்ற சிக்கல்கள் நீங்கும். கடன் சிக்கல்கள் நீங்கும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும்.

varahi-amman-goddes-history-temples-tamil
varahi-amman-goddes-history-temples-tamil