திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில்

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் திருக்கோயில்

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து பக்தியுடன்

திருச்சிக்கு அருகே உள்ளது திருப்பைஞ்ஞீலி “ஞீலி’ என்பது ஒருவகை கல்வாழை பசுமையான ஞீலி வாழையை தல விருச்சமாகப் பெற்றதால் திருப்பைஞ்ஞீலி என்று இத்திருத்தலம் பெயர் பெற்றது. ஞீலி என்ற இந்த வாழை வேறு இடத்தில் பயிர் ஆவதில்லை இதன் இலை காய் கனி அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணிக்கப்படுகிறது. இவற்றை மனிதர்கள் உண்டால் நோய் வருமாம் இதன் கனியை சுவாமிக்கே நீவேதனம் செய்து தண்ணீரில் கரைத்து விடுவார்கள்.

ஆதிதிருவெள்ளரை அடுத்தது திருப்பைஞ்ஞீலி ஜோதி திருவானைக்காவல் சொல்லிக் கட்டியது திருவரங்கம்” என்னும் பழமையான வழக்காறு இத்தலத்தின் பெருமையை நன்கு உணர்த்துகிறது. திருக்கடையூரில் தாம் காலால் உதைத்தமையால் மாண்ட எமதர்மராசனுக்கு இறைவன் மீண்டும் குழந்தையாக உயிர் கொடுத்த தலம். குடைவரைக் கோயிலாக அமைந்துள்ள ஒரு சந்நிதி இங்கு எமனுக்காக உள்ளது. அதனால் இங்கு நவக்கிரகங்கள் கிடையாது. எமபயம் நீங்க பிரத்தியேகமாக “எமதீர்த்தத்தை தெளித்து இங்கு எழுந்தருளியுள்ள எமதர்மருக்கு அர்ச்சனை செய்தால் எமபயம் நீங்கும் என்பது நம்பிக்கை”.

இத்திருக்கோவிலுக்கு வந்து “ஆயுட்ஹோமம்” செய்து எமனை தரிசித்து சென்றால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து “வாழைபரிகாரம்” செய்தால் திருமணதடை நீங்குகிறது. ஒவ்வொரு வருடமும், புரட்டாசி மற்றும் பங்குனி ஆகிய மாதங்களில், சுயம்பு லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் படர்வதைக் காண்பது சிறப்பாகும்.

முதலில் ஒரு முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இந்த இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது.

திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார்.

களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்று அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.

திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞிலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.

எமன் சந்நிதி: இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.

திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமாதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை.

இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும் இந்த படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறர்கள். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர். இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார்.

மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்கினி பகவான், இராமர், அர்ச்சுணன், வஷிஷ்ட முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். மூலவர் சந்நிதியில் இரத்தின சபை இருக்கிறது. வசிஷ்ட முனிவருக்கு அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிவபெருமான் நடன தரிசனம் தந்து அருளிய இரத்தின சபை தலம் இதுவாகும். இத்தலத்திற்கு மேலச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு.

இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படும்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவர் என்ற அகந்தை உண்டானது சரி வாக்குவாதம் வேண்டாம் போட்டி வைத்துக் கொள்வோம் என்றான் ஆதிசேஷன்.

சரி என்ன போட்டி என்றான் வாயுதேவன் அதோ தெரிகிறதே மேருமலை அதை சுற்றி வளைத்துக் கொள்கிறேன் அசைத்து விட்டால் நீ தான் பெரியவன் இல்லையென்றால் நான் தான் பெரியவன் என்றான் ஆதிசேஷன் அப்படியே போட்டி ஆரம்பமானது சூறாவளிக்காற்றை உண்டு பண்ணினார் வாயு சிறிதளவு கூட அசையவில்லை மறுபடியும் கடுமையான சூறாவளிக் காற்று உண்டு பண்ணினார். அப்பொழுதும் சிறிதளவு கூட அசையவில்லை அப்பொழுது வான் வழியாக நாரதர் தன் வீணையை மீட்டி நாராயணனின் கீர்த்தனை இசைத்துக்கொண்டு பாடி சென்றார் இசைக்கு மயங்கிய ஆதிசேஷன் யார் என்று தலை நிமிர்ந்து பார்த்தான் இதுதான் தக்க தருணம் என்று எண்ணி தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து பெரும் சூறாவளி காற்றை உண்டு பண்ணி ஊதினார் மலைகள் சுக்கு நூறாக உடைந்து நிலப்பரப்பிலும், சமுத்திரத்திலும் ஓடி விழுந்தன சமுத்திரத்தில் விழுந்த இடங்கள் 1 இலங்காபுரி, 2 ரத்தினாபுரி, 3 சொர்க்கபுரி ஆதிசேஷனின் தலை விழுந்த இடம் சிரகிரி

நிலப்பரப்பில் அவை திருகோணமலை, திருகாளத்தி, திருசிராமலை, திருஈங்கோய்மலை, ரஜிதகிரி, நீர்த்தகிரி, ரத்தினகிரி, சுவேதகிரி என்பனவாகும். இதில் சுவேதகிரி என்பதே இத்தலமான திருப்பைஞ்ஞீலி ஆகும். எனவே இத்தலம் தென்கைலாயம் என வழங்கப்படுகிறது.

இத்தலத்தில் கன்னிமார்களான பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் திருமண வரம் வேண்டி தவம் இருக்கும் போது, பார்வதி அன்னை அவர்கள் முன் தோன்றி, வரம் அளித்ததுடன், வாழை மர வடிவில் இத்தலத்திலேயே குடி கொண்டு என்றேன்றும் தனது அருளைப் பெறலாம் எனக் கூறினாள். பின்னர், அவ்வாழை வனத்தின் மத்தியில் சிவனாரும் லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளி அருள்பாளிக்கிறார்.

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…

3 weeks ago

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…

4 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago