Anmegam

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு

ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன் சித்தம் சுத்தமாகும். சித்த ரிஷிகளாகவே மாறுகிறான் .

சிவலிங்க பூஜை செய்பவன் முடிவில் சிவமாகவே ஆகிவிடுகிறான். சிவலிங்கத்தின் பிம்ப தரிசனம் கொலை செய்தவனின் பாபத்தையும் கூட போக்கும்.

சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தா லும், பூஜை செய்தாலும், சிங்கத்தை கண்டு மற்ற மிருகங்கள் தெறித்து ஓடுவதுபோல பாபங்கள் கழன்று ஓடும் . இதனை பக்தியுடனோ அல்லது பக்தியே இல்லாது அல்லது எதிர்பாராமல் திடீரென பூஜை செய்ய நேர்ந்தாலும் முக்தி உண்டு .

சிவபூஜை பூஜை செய்பவனுக்கு எமபயமில்லை . சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தி யம் , வேள்விகள் செய்து இப்பூஜையினை செய்பவர்கள் சிவலோகத்தில் அனந்தகாலம் வாழ்வார்கள் . சிவலிங்கத்தை பக்தியுடன் நமஸ்கரித்தவன் தேவனாகிறான். அதன் பின் அவன் சாதாரண மனிதன் அல்லன்.

சிவலிங்கம் – சிவன் இருக்குமிடம் சர்வ பாபங்களையும் நாசம் செய்யவல்லது . பாபங்கள் செய்தவர்கள் கூட சிவலிங்க பூஜையினால் பரகதி அடைகிறார்கள். பக்தி யோடு செய்பவர்கள் முக்தியடைகிறார்கள் . அரணி கட்டையில் அக்னி உண்டாவது போல, சிவலிங்கத்தின் சிவன் இருக்கின்றார்.

லஷ்மி மற்றும் வைகுண்டத்தில் இருப்பதைவிட சிவன் சிவலிங்கத்தின் மிகவும் பிரசன்னமாகவே உள்ளார்.
சிவலிங்கத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் கோதானமும் செய்த பலன். அஸ்வமேத யாகம் ஆயரம் செய்தாலும், ஒரு நாள் சிவலிங்கத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகாது.

sivalinga-poojai-lingam-tiruvannamalai-shivalingam-lord-shiva

சிவராத்திரி வேளையில் லிங்கோற்பவ காலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு கல்பகாலம் பூஜை செய்த பலன் ஒரே நாளில் கிடைக்கும்.

காமக்குரோதம் உள்ள மனிதன்கூட சிவலிங்க பூஜையினால் முக்தி பெறுவான். தீர்த்தயாத்திரையோ யாகமோ செய்யாமலே சிவலிங்க பூஜையினால் முக்தியடைவான்.

சிவலிங்கத்தை அபிஷேகம் செய்த தீர்த்தத் தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும். பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சிவலிங்கத்தின் சூட்சுமாமயிருந்து அருள்பாலிக்கின்றனர். ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவலிங்க பூஜை செய்பவன் சிவகதி அடைகிறான்.

சிவலிங்கம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக ஐதீகம். பஞ்சகவ்யம் ஏன் சாப்பிட வேண்டும். சிவலிங்க தீர்த்தமே போதுமே நம் உள்ளும் புறமும் சுத்தமாகுமே.

ஒரு திவலை சிவலிங்க அபிஷேக தீர்த்தம் சாப்பிட்டாலே போதுமே, மீண்டும் பிறவா நிலை கிடைத்துவிடும். ஓம் நமசிவாய.. அவனருளாலே அவன் தாழ் வணங்கிடுவோம்.

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…

4 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago

கண்ணப்ப நாயனார் வரலாறு

தாய், தந்தை அற்றவர், பிறப்பு, இறப்பு என அனைத்தையும் கடந்தவர் ஈசன் என குறிப்பிடுகிறோம்.உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவளிக்கும், படியளப்பவனாக…

4 weeks ago