AnmegamHistory's

சங்கடங்களை தீர்க்கும் சக்தி வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி தின தரிசனம் !!

விநாயகர் ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

நல்ல நேரம் பார்த்து, நல்லா ஹோரை பார்த்துச் செய்யும் காரியங்கள்- மிக மோசமான தசை, புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அருமருந்தாக அமையும்.,
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பளபளக்கும் தங்க நிறம் கொண்ட லட்சுமியோடும்,அருகம்புல் போல கரும் பச்சை நிறம் கொண்ட பூ தேவியோடும், இவ்விரு தேவிகளுடன் மகிழ்ச்சி கொண்ட மூவுலகத்தின் க்ருஹஸ்தனான விஷ்ணுவை நமஸ்கரிக்கிறேன்.

குழ‌ந்தைக‌ளுக்காக‌ நீதி நூல்களைச் செய்த‌ அவ்வையார் பெரிய‌வ‌ர்க‌ளுக்குக்கூட‌ எளிதில் புரியாத‌ பெரிய‌ யோக‌ த‌த்துவ‌ங்க‌ளை வைத்துப் பிள்ள‌யார் மேலேயே ஒரு ஸ்தோத்திர‌ம் செய்திருக்கிறாள். அத‌ற்கு “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” என்று பெய‌ர்.

அள‌வில் சின்ன‌துதான் அந்த‌ அக‌வ‌ல் ஸ்தோத்திர‌ம்.பிள்ளையாரை நினைக்கிற‌போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இர‌ட்டிப்பு அநுக்கிர‌ஹ‌ம் கிடைக்கும். ‘விநாய‌க‌ர் அக‌வ‌லை’ச் சொன்னால் இர‌ண்டு பேரையும் ஒரே ச‌ம‌யத்தில் நினைத்த‌தாகும். எல்லோரும் இதைச் செய்ய‌வேண்டும்.

வெள்ளிக்கிழ‌மைதோறும் ப‌க்க‌த்திலுள்ள‌ பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” சொல்லி விக்நேச்வ‌ர‌னுக்கு அர்ப்ப‌ண‌ம் ப‌ண்ண‌வேண்டும்.பிள்ளையாருக்கு எல்லோரும் சொந்த‌ம்; பிள்ளையார் எல்லோருக்கும் சொந்த‌ம். ஏழை எளிய‌வ‌ருக்கும், சாஸ்திர‌ம் ப‌டிக்காத‌ சாமானிய‌ ஜ‌ன‌ங்க‌ளுக்கும்கூட‌ச் சொந்த‌ம். ம‌ற்ற‌ ஸ்வாமிக‌ளின் நைவேத்திய‌ விநியோக‌த்தில் பெரிய‌ ம‌நுஷ்ய‌ர்க‌ளுக்குத்தான் முத‌லிட‌ம்.

பிள்ளையாரோ த‌ம‌க்குப் போடுகிற‌ சித‌றுகாய் இவ‌ர்க‌ளுக்குப் போகாம‌ல் ஏழைக் குழ‌ந்தைக‌ளுக்கே போகும்ப‌டியாக‌ வைத்துக் கொண்டிருக்கிறார்! எல்லோரும் “அக‌வ‌ல்” சொல்லி அவ‌ரை வ‌ழிப‌ட‌ வேண்டும். பெண்க‌ளுக்கும், குழ‌ந்தைக‌ளுக்கும் இதில் அதிக‌ உரிமை உண்டு.

அவ்வை பெண்ணாக‌ப் பிற‌ந்த‌தால், பெண்க‌ள் எல்லோருக்கும் அவ‌ளுடைய‌ இந்த‌ ஸ்தோத்திர‌த்தில் பாத்திய‌தை ஜாஸ்தி. அவ‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு உப‌தேசித்த‌ பாட்டி. விநாய‌க‌ரும் குழ‌ந்தைத் தெய்வ‌ம். அத‌னால் அவ‌ளுடைய‌ அக‌வ‌லைக் குழ‌ந்தைக‌ள் யாவ‌ரும் அவர்முன் பாடி ஸ‌ம‌ர்ப்பிக்க‌வேண்டும்.

கொஞ்ச‌ம் ‘க‌ட‌முட‌’ என்றிருக்கிற‌தே, அர்த்த‌ம் புரிய‌வில்லையே என்று பார்க்க‌ வேண்டாம். அர்த்த‌ம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே ந‌ன்மை செய்கிற‌ ச‌க்தி உண்டு’ என்று ந‌ம்பி அக‌வ‌லைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அத‌னால் நாமும் க்ஷேம‌ம் அடைவோம்.

நாடும் க்ஷேம‌ம் அடையும்.அழ‌கான‌ பெட்டி ஒன்று கிடைக்கிற‌து. அதற்குள் நிறைய‌ ர‌த்தின‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனாலும் பெட்டியைத் திற‌க்க‌ச் சாவியைக் காணோம். அத‌னால் பெட்டி வேண்டாம் என்று விட்டு விடுவோமா? “சாவி கிடைக்கிற‌போது கிடைக்க‌ட்டும்” என்று பெட்டியை வைத்துக் கொள்வோம் அல்ல‌வா? இப்போது பெட்டியை விட்டுவிட்டால் பிற‌கு சாவி கிடைத்தாலும் பிர‌யோஜ‌ன‌மில்லையே? “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” அப்ப‌டிப்ப‌ட்ட‌ அழ‌கான‌ பெட்டி. அத‌ற்குள்ளே யோக‌ சாஸ்திர‌ விஷ‌ய‌ங்க‌ள் ர‌த்தின‌ம் மாதிரி உள்ள‌ன‌.

அவ‌ற்றைப் புரிந்துகொள்கிற‌ புத்தி (சாவி) இப்போது ந‌ம்மிட‌ம் இல்லாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. இப்போதே பிடித்து அதைச் சொல்லிக்கொண்டிருப்போம். சொல்ல‌ச் சொல்ல‌, தானே அர்த்த‌மும் புரிய‌ ஆர‌ம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவ‌த‌ற்கான‌ அநுக்கிர‌ஹ‌த்தைச் செய்வார்.

பிள்ளையார் எல்லாருக்கும் ந‌ல்ல‌வ‌ர்; எல்லாருக்கும் வேண்டிய‌வ‌ர்; சொந்த‌ம். சிவ‌ ச‌ம்ப‌ந்த‌மான‌ லிங்க‌ம், அம்பாள், முருக‌ன் முத‌லிய‌ விக்கிர‌ஹ‌ங்க‌ளைப் பெருமாள் கோயிலில் பார்க்க‌ முடியாது. ஆனால், பிள்ளையாரும் சிவ‌ குடும்ப‌த்தைதான் சேர்ந்த‌வ‌ர் என்றாலும், விஷ்ணு ஆல‌ய‌ங்க‌ளில்கூட‌ப் பிள்ளையார் ம‌ட்டும் இருப்பார். ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்று அவ‌ருக்குப் பெய‌ர் சொல்லுவார்க‌ள்.

ம‌தச்ச‌ண்டைக‌ளுக்கெல்லாம் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர் அவ‌ர்.அத‌னால்தான் புத்த‌ம‌த‌ம், ஜைன‌ம‌த‌ம் எல்லாவ‌ற்றிலும்கூட‌ அவ‌ரை வ‌ழிப‌டுகிறார்க‌ள். த‌மிழ் நாட்டிலிருப்ப‌துபோல் ம‌ற்ற‌ ராஜ்ய‌ங்க‌ளில் த‌டுக்கி விழுந்த‌ இட‌மெல்ல‌ம் விநாய‌க‌ர் இல்லாவிட்டாலுங்கூட‌, பார‌த‌ தேச‌த்திலுள்ள‌ அத்த‌னை ஸ்த‌ல‌ங்க‌ளிலும் ஓரிடத்திலாவ‌து அவ‌ர் இருப்பார். “க‌ன்னியாகும‌ரியிலும் பிள்ளையார்; ஹிம‌ய‌த்தின் கோடியில் கேதாரத்திலும் ஒரு பிள்ளையார்” என்று ஒரு க‌ண‌ப‌தி ப‌க்த‌ர் என்னிட‌ம் பெருமைப்ப‌ட்டுக் கொண்டார்.

ஸ்ரீ விநாயகர் அருளாளே இந்நாளும் திரு நாளாகட்டும்..!