Anmegam

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.

வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள்.
ஒரு சிலருக்கு உடல்நல ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும். வேறு சிலர் வசதியின்றி, வறுமையில் கஷ்டப்பட்டு வருவர்.

அது மட்டுமில்லாமல் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போதல், குழந்தை பேறின்மை, திருமணமான தம்பதியரிடையே பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள் போன்றவைகள் வருவதற்கு தலைமுறை, தலைமுறையாக ஏற்படும் முன்னோர்களின் சாபங்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது.

அதையடுத்து, முன்னோர்களின் சாபங்களை போக்குவதற்கான கோயில் குறித்து பார்க்கலாம்.

பிரம்மஹத்தி தோஷம் :

pitru-dosh-nivaran-puja-at-trimbakeshwar-temple-pithru-saabam

சாபங்களிலேயே மிகவும் கொடிய சாபமாக முன்னோர்களின் சாபமே பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படுகிறது. பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோயிலாக கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.

1200 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோர்களால் பாடப்பட்டதாகும். முன்பொரு சமயம் மதுரையை அரசாட்சி செய்து வந்த வரகுண பாண்டியன் என்ற மன்னன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் கால்பட்டு இறந்து விட்டான்.

இந்த செயல் பாண்டிய மன்னனுக்கு தெரியாமலே நடந்தது என்றாலும் மன்னனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
பெரிய சிவபக்தனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான்.

அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான், சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறினார்.

திரும்பி வரும் போது… எதிரி மன்னனாக திகழும் சோழ நாட்டிற்குள், எப்படி செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது.

அதையடுத்து, போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான். அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக சென்று மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து பாண்டிய மன்னன் வழிபட்டான்.

வரகுண பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழையும் போது, அவரை பற்றி இருந்த பிரம்மஹத்தி தோஷம் வெளியே நின்றது. வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருந்தது.

அப்போது சிவபெருமான், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். அதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது. அதையடுத்து, பாண்டிய மன்னன் சென்றது போலவே, இன்றும் இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

சிறப்பு :

உலகளவில் மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டிருக்கும் 3 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீசைலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவை மற்ற 2 கோயில்களாகும்.

திருவுடைமருதூர் கோயிலில் இருக்கும் 3 பிரகாரங்களை வலம் வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அஸ்வமேதப் பிரகாரம் :

முதலாவதாக இருக்கின்ற இந்த வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

கொடுமுடிப் பிரகாரம் :

இரண்டாவதாகவும், மத்தியிலும் இருக்கும் இப்பிரகாரத்தை வலம் வருவது.
சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலையை வலம் வருவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

பிரணவப்பிரகாரம் :

மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.
7 தலைமுறை முன்னோர்களின் பாவத்தை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம்..
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மல்லேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ
ஓம் நம சிவாய…

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…

3 weeks ago

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago

கண்ணப்ப நாயனார் வரலாறு

தாய், தந்தை அற்றவர், பிறப்பு, இறப்பு என அனைத்தையும் கடந்தவர் ஈசன் என குறிப்பிடுகிறோம்.உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவளிக்கும், படியளப்பவனாக…

4 weeks ago