Anmegam

நாயன்மார்கள் புராணம் | Thillaivaazh anthanar history

நாயன்மார்கள் புராணம் | Thillaivaazh anthanar history

01. தில்லைவாழ் அந்தணர் புராணம்

“தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்”

இறைவன்: திருமூலட்டானேஸ்வரர்
இறைவி: சிவகாமியம்மை
அவதாரத் தலம்: சிதம்பரம்
முக்தி தலம்: சிதம்பரம்
குருபூசை நாள்: சித்திரை முதல் நாள்

வெள்ளைப் பிறையணிந்த வேணிபிரான் எழுந்தருளியிருக்கும் தில்லை என்னும் இத்திருத்தலம் சோழவள நாட்டிலுள்ளது. தில்லை என்பது சிதம்பரமாகும்.

ஓங்கி வளர்ந்த நெற்கதிர்களைத் தாங்கிய பரந்த வயல்கள், கதிரவனைக் கண்டு களிக்கும் செங்கமல மலர்கள் நிறைந்த தடாகங்கள், ! அத்தடாகங்களில் மலர்ந்திருக்கும் செந்தாமரை மலர்கள் தில்லையின் இயற்கை எழிலை எடுத்துக்காட்டின.

அங்குள்ள சோலைகளில், மரங்கள் ஒன்றொடொன்று நெருக்கமாக, ஓங்கி வளர்ந்திருக்கும்.

அம்மரங்களில் குயில்கள் பாட, கிளிகள் கத்த, அழகு மயில்கள் தோகை விரித்தாட, அன்னப் பறவைகள் ஒலியை எழுப்பிக் கொண்டேயிருக்கும். ! நறுமணப் பூச்செடிகள் அழகிய வடிவங்களில் ஆங்காங்கே எழிலோடு காணப்படும்.

உயர்ந்த மதிற் சுவர்கள், அம் மதிற் சுவற்றைச் சுற்றித் தாழைகள் நிறைந்த அகழிகள் – அத்தாழை மலர்களில் தேன் பருக வரும் கரு! வண்டுகள் – மலரின் மகரந்தத்தூள் படுவதால் திருநீறு அணிந்த அடியார்களைப் போல் தோற்றமளிக்குமாம். ! தில்லையில் எந்நேரமும் மாமறைகளின் ஒலி எழுந்த வண்ணமாகவே இருக்கும்.

ஆங்காங்கே காணப்படும் நடன அரங்கங்களில் ஆடும் ஆரணங்கு அழகிகளின் சதங்கை ஒலியும் கூடவே ஒலிக்கும். ! வான வீதியில் எந்நேரமும் தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, நரம்புக்கருவி, மாடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக் கருவிகளின் முழக்கமும் கேட்ட வண்ணமாகவே இருக்கும். ! மாலை வேளைகளில் வண்டுகளின் ரீங்கார ஓசை, அன்பின் பெருக்கால் எம்பெருமானை வழிபடும் அடியார்களின் அரகரா! சிவ! சிவா! என்ற திருநாம ஓசையோடு, சேர்ந்து தேவகனமாய் ஒலிக்கும்.

மாட மாளிகைகளில் வேதியர் வளர்க்கும் வேள்விப் புகை விண்ணை முட்டும். கூட கோபுரங்களில் ஆடி விளையாடும் மயில்களின் ஆட்டம் கண்களைக் கவரும்! . வேள்விச் சாலைகளில் வெந்தணல் ஒளிவீச, அன்னச் சாலைகளில் செந்நெல் அரிசிச் சோறு வெள்ளி மலையென ஒளியுடன் திகழ! , நீண்டு, அகன்ற பெருவீதிகளில் கூடியிருக்கும் அடியார்களின் திருமேனிகளில் திருவெண்ணீறு ஒளிவீச, தில்லை வெள்ளி மாமலையெனப் பொலிவுடன் திகழும்.

தில்லையில், எந்நேரமும் சிவனடியார் கூட்டம் இருந்துக் கொண்டேயிருக்கும். அதனால் அங்கு சிவ நாமம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். தில்லையிலே! எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், சிவனருள் பெற்று வெண்ணீறு அணிந்த பொன்மேனி கோலத்தோடு ஆனந்தத்தாண்டவம் ஆடும் நடராஜப் பெருமானாய் காட்சி தருகிறார்.

இத்தகைய பல்வளமிக்கத் தில்லையில் சிவனருள் பெற்று வாழும் அடியார்கள் தான் தில்லைவாழ் அந்தணர்கள் எனப்படுவோர். ! பொன்னாகி, மணியாகி, போகமாகி, புறமாகி, அகமாகி, புனிதமாகி, மண்ணாகி, மலையாகி, கடலுமாகி, ஆதியாகி, நடுவுமாகி, அளவிலா அளவுமாகி, பெண்ணுமாகி, ஆணுமாகி, கருணை ! மழை பொழியும் வள்ளலுமாகி ஆனந்தத் தாண்டவம் ஆடும் பிறையணிந்த பெருமானின் ! பூங்கழல்களைப் போற்றி வரும் இத்தில்லைவாழ் அந்தணர்கள் மொத்தம் மூவாயிரம் பேர் ஆவர்.

தில்லைவாழ் அந்தணர்கள் என்ற நாமம், எந்தத் தனிப்பட்டவரையும் குறிக்காத பொதுப்பெயர். கற்பனையைக் கடந்த ஒளி வடிவமாக விளங்கும்! நடராஜ பெருமானைச் சேவிக்கின்ற மூவாயிரம் அந்தணர்களையும் மொத்தப் படுத்தித் தான் தில்லைவாழ் அந்தணர் என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். பொன்னம்பல வாணரை! முப்போது மட்டுமின்றி, எப்போதும் போற்றி வழிபடும் இத்திருவுடைய தில்லை மூவாயிரம் அந்தணர்கள் தெய்வத்தன்மை நிறைந்த மூவாயிரம் வேதியர்களாவர்.

இவர்கள் தில்லை தீட்சதர்கள் எனப் பெயர் பெற்று விளங்குபவர். இத்தில்லை வாழ் அந்தணர்கள் ! எப்பொழுதும், எக்காலமும், திருவெண்ணீறு அணிந்த கோலத்தினராய்- உள்ளும் புறமும் மாசற்று – அகமும், முகமும் மலர தூய வடிவினராய் விளங்குவர். பக்தியின் எல்லை கண்டு பக்குவத்தின் நிலைமை பெற்றவர்.

பொன்னம்பலவாணரின் குஞ்சித பாதம் வணங்குவோர்க்கு, சஞ்சித வினைகள் துகள்பட்டு ஒழியும் என்ற முறைமைக்கு ஏற்ப பரமனைத் தொழுது வாழுபவர்! பொன்னம்பலத்தரசரை, வேதச் சிலம்புகள் ஒலிக்க, பூசிப்பவர்! உயிர்களிடத்தும் பேரன்பு மிக்கவர். அறத்தையே செல்வமாகக் கொண்டவர். குற்ற மற்ற அந்தணர் குலத்தில் தோன்றியவர். தூய நெறிப்படி தலைசிறந்து ஒழுகுபவர்.

நலம்புரியும் நாயகனுக்குத் திருத்தொண்டு புரியும் தவத்தவர். சிவத்தொண்டே தான் இவ்வடியார்களின் ஒப்பற்ற ஒரே சிந்தனை! செயல் எல்லாம்.

இவர்கள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும், நன்கு கற்றுணர்ந்தவர். சிட்சை, வியாகரணம், சந்தோவிசிதி, திருத்தம், சோதிடம், கற்பம் ! என்னும் ஆறு அங்கங்களையும், மீமாம்சை, நியாஸம், புராணம், ஸ்மிருது என்னும் நான்கு உபாயங்களையும் ஐயந்திரிபுறக் கற்றவர்.

வேத விதிப்படி ஆகவனீயம், சாருகபத்தியம், தக்கணாக்கினி என்னும் முத்தீ வளர்ப்பவர். ! சிவாகமத்தில் கூறப்படும் சிரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு வகைப் பாதங்களையும் நன்கு உணர்ந்தவர். பிறப்பிலேயே! இறைவனின் திருவருளைப் பெற்ற இவர்கள் நிலவுலகில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தை வேரோடு ஒழித்தனர் என்ற பெருமையையும், பாராட்டையும் பெற்றவர்.

இவ்வடியார்கள் எவ்வகைக் குற்றமும் இல்லாதவர். மானமும், பொறுமையும் தாங்கி மனையறம் நடத்துபவர். ! செம்மையான உள்ளம் கொண்டவர். தென் தமிழ்த் தவப்பயனால் எழுந்த திருத்தொண்டத் தொகையைப் பாடுவதற்கு திருவாரூரில்! தேவாசிரிய மண்டபத்தில் சுந்தரருக்குத் திருவருள் புரிந்த புற்றிடங்கொண்ட பெருமானின்! அமுதவாக்கால், “தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடி எடுத்துக் கொடுக்கப் பெற்ற பெரும் பேறு பெற்ற நற்றவமுடையவர்.

இங்ஙனம் மதியணிந்த பெருமானாலேயே சிறப்பிக்கப் பெற்றத் தில்லை வாழ் அந்தணர்களின் பக்தியையும், பெருமையையும், புகழையும் அளவிடுவதுதான் எங்ஙனம்? அழ்கடலின் ஆழத்தை அளவிட முயலும் கதை போலத் தோன்றும்!

முகவரி : அருள்மிகு. நடராஜர் திருக்கோயில், சிதம்பரம் – 608 001 கடலூர் மாவட்டம்

தேவார காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடுவதற்குப் பல! நூற்றாண்டு காலத்திற்கு முன்பாகவே தில்லை மூவாயிரவர் தனிச் சிறப்புப் பெற்றிருந்தாலும் சுந்தரர் வாக்கில் உரைத்த பிறகே உலக மக்களிடையே அவர்களை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தெரிய வந்தது .

திருஞானசம்பந்தப் பெருமான் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் என்று அவர்களைப் போற்றுவதைக் காண்கிறோம்.

குலசேகர ஆழ்வாரும், தில்லை கோவிந்தராசரைத் தில்லை மூவாயிரவர் ஏத்த அணிமணி யாசனத்திருந்த பிரான் என்று போற்றுவதைக் காண்கிறோம்.

அந்நாளில் தில்லையம்பலத்து தெற்றியில் இருந்த கோவிந்தராசரை தீக்ஷிதர்கள் பூசித்து வந்ததையே இத்தொடர் குறிக்கிறதென்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.

பெரிய புராணத்தில் தில்லைவாழ் அந்தணர் சருக்கத்தில் தில்லை மூவாயிரவர் தீக்ஷிதர்களே என்னும் கருத்து தெளிவாக்கப்பட்டுள்ளது.

மேலும், திருஞானசம்பந்தர் புராணத்தில் தில்லைவாழ் அந்தணர்களைத் திருஞானசம்பந்தர் சிவகணநாதர்களாகவே கண்ட குறிப்பும் உள்ளது.

இனி, சிற்ப உலகம் தீக்ஷிதர்கள் பற்றி என்ன சொல்கிறதென்று பார்ப்போம். சேக்கிழார் காலத்தை ஒட்டியே அமைக்கப்பட்ட ஆலயம் தாராசுரம் ஐராவதேசுவரர் ஆலயமாகும்.

இதில் ஸ்ரீவிமானத்தின் புறச்சுவரில் அறுபத்துமூவர் வரலாற்றை விளக்கு தொடர்சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் தில்லைவாழ் அந்தணரைக் குறிக்கும் வகையில் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. இதில் பஞ்சாட்சரப் படிகள் காட்டப்பட்டுள்ளன. அதன் முன்புறம் மூவர் நிற்கின்றனர்.

ஆயிரத்திற்கு ஒருவர் வீதம் மூன்றாயிரத்துக்கு மூன்று தீக்ஷிதர் திருவுருவங்கள் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.

இதே போன்ற காட்சியைத் திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலய அறுபத்துமூவர் சிற்பத் தொடரிலும், வடாற்காடு மாவட்டம் புரசை கயிலாசநாதர் கோயில் சிற்பத் தொடரிலும் காண்கிறோம்.

இவர்களுக்கு அடுத்து வந்த அருணகிரிநாத சுவாமிகளும் தில்லைத் திருப்புகழில் தில்லை மூவாயிரவரைக் குறிக்கின்றனர்.

இப்படி காலந்தோறும் மூவாயிரவர் பற்றிய குறிப்புகள் தெளிவாக இருந்த போதிலும், அண்மைக் காலத்துச் சொற்பொழிவாளர்கள் மூல நூலைப் படிக்காமல் மனம் போனபடி சொல்லி மக்களைக் குழப்பும் அரும்பணியைச் செய்து வருகின்றனர்.

இவர்களுடைய அரும்பணிகளால் அறுபத்துமூவர் வரிசையில் தொகையடியார்களை விலக்கி விட்டு பிரதிஷ்டை செய்வது போன்ற அபத்தங்களும் நடைபெற்று வருகின்றன.

அன்பர்களும் சொற்பொழிவுகளைக் கேட்பதோடு நின்றுவிடாமல் மூலநூல்களைத் தேடிப் பிடித்து அவர்கள் சொன்னவற்றைச் சேர்த்துச் சிந்திக்கவும் வேண்டும்.

நாயன்மார்களின் வரிசை தொடரும்…………

“ஓம் நமசிவாய…! சிவாய நம ஓம்…!”

“திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்” “திருச்சிற்றம்பலம்”


Read more at: https://www.shavathuli.in/

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…

3 weeks ago

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…

4 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago