Anmegam

கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு தெரியுமா?

கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு தெரியுமா?

அனைத்து சிவாலங்களிலும்,ஈசானிய மூலையில்(வடகிழக்கு) நவக்கிரகங்கள் மேற்குதிசை முகப்பாக அமைந்திருக்கும்.நடுவில் இருக்கும் கிரகம் சூரியன்.சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும்,மேற்கில் சனியும்,வடக்கில் குரு,தெற்கில் செவ்வாய்,வடகிழக்கில் புதன்,தென் கிழக்கில் சந்திரன்,வட மேற்கில் கேது,தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர்.

  • சூரியன் கிழக்கு முகமாக இருப்பார்.
  • சந்திரன்-மேற்கு;
  • செவ்வாய்- தெற்கு;
  • புதன்-வடக்கு;
  • குரு-வடக்கு;
  • சுக்கிரன்-கிழக்கு;
  • சனி-மேற்கு;
  • ராகு-தெற்கு;
  • கேது-தெற்கு.

இந்த முறையில் அமைந்திருப்பார்கள்.ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள்.சிவாலங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை.

நவக்கிரகங்களை 7 முறை கடிகார சுற்றிலும்,2 முறை எதிர் சுற்றிலும் வலம் வந்து வணங்கவேண்டும்.ஏனென்றால் சூரியன் முதலான ஏழு கிரகங்கள் இடமிருந்து வலமாக சுற்றும் ஆனால் ராகு,கேது இரு கிரகங்களும் வலமிருந்து இடமாக சுற்றும்.

பெரும்பாலும் நவக்கிரக ஸ்லோகங்கள் சமஷ்கிருதத்தில் இருக்கும்.அதை அனைவரும் மனனம் செய்து சொல்வது சிரமம்.ஆதலால் கீழ்கண்ட எளிய முறையில் சொல்லலாம்.

சூரியனே போற்றி,சந்திரனே போற்றி,செவ்வாயே போற்றி,புதனே போற்றி,குருவே போற்றி,சுக்கிரனே போற்றி,சனியே போற்றி,ராகு&கேதுவே போற்றி போற்றி என சொல்லிகொண்டே நவக்கிரகத்தை வழிபடலாம்.

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…

3 weeks ago

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…

4 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago