Entertainment

நிம்மதியாக இருக்க முடியவில்லையா

நிம்மதியாக இருக்க முடியவில்லையா

“என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை”

என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.

“உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?” என்று ஞானி கேட்டார்.

“என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை” என்றான்.

“அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு”என்றார் ஞானி.

“எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான் மன்னன்.

“நீ என்ன செய்வாய்” என்றார் ஞானி.

பிரதிநிதியாக நீ நாட்டை ஆண்டு வா

“நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து, பிழைத்துக் கொள்கிறேன்”என்றான் அரசன்.

“எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட,என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.”என்றார்.

சரி என்றான் மன்னன். ஒரு ஆண்டு கழிந்த பின், ஞானி அரசனைக் காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன், நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.

“அது கிடக்கட்டும்”என்ற ஞானி,”நீ இப்போது எப்படி இருக்கிறாய்”

என்று கேட்டார்.

“நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்”.

“முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்யும் பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா”

“இல்லை”

“அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய். இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?” என ஞானி கேட்டார்.

விழித்தான் அரசன்.

ஞானி சொன்னார்.

‘நான்’ என்ற எண்ணம்

“மன்னா கேள்! அப்போது நீ, ‘இது என்னுடையது’ என்று எண்ணினாய். இப்போது ‘இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான்’ என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. ‘நான்’ என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.

இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப் பட்டது’, என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்” என்று அறிவுறுத்தி நாட்டை அவரிடமே கொடுத்து விட்டு ஆசீர்வதித்தார்.

எனவே, நமக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும், சலிப்பும், சோம்பலும் இன்றி, படபடப்பும் பரபரப்பும் இன்றி, அமைதியுடனும், அன்புடனும், நன்றி உணர்வுடனும், பணிவுடனும், செய்து அமைதியுடன் வாழ்வோம்.

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…

3 weeks ago

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…

4 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago