Anmegam

கார்த்திகை தீபமும் திருஅண்ணாமலையும்

கார்த்திகை தீபமும் திரு அண்ணாமலையும்

பொதுவாக திருவண்ணாமலை என்றாலே முதலில் நமது ஞாபகத்திற்கு வருவது கார்த்திகை தீபம், இந்த கார்த்திகை தீபமானது கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரம் அன்று அடைமொழி அறிய அண்ணாமலையாரின் பெருமையை போற்றும் வண்ணமாக இந்த கார்த்திகை தீபமானது கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு வருகின்ற பக்தர்களின் கூட்டமானது பெருகிக்கொண்டே செல்கிறது.

கார்த்திகை தீபம் என்பது திருவண்ணாமலையில் கொண்டாடப்படுகின்ற மிகவும் விமர்சியான திருவிழா ஆகும், இந்த விழாவில் பெரும்பான்மையான மக்களின் கருத்து திருமாலுக்கும் பிரம்மதேவருக்கும் ஏற்பட்ட சண்டையின் காரணமாகவே சிவபெருமான் தன்னுடைய விஷ்வ ரூபத்தை தெரிவிக்கிறார்.

என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர், ஆனால் சிவபெருமானின் சோதி வடிவத்தை உலக மக்களின் பார்வைக்கு கொண்டு வரவே இந்த நிகழ்வானது நடைபெற்றது, பிரம்மதேவரும் திருமாலும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் ஈடுபட்டு சிவபெருமானின் விஸ்வரூபத்தை அகில உலகத்திற்கும் உணர்த்தவே இந்த திருவிளையாடல் நடைபெற்றது.

tamil-samayam-tiruvannamalai-deepam-karthigai-deepam-annamalaiyar-deepa-thiruvizha


கார்த்திகை தீபம் என்பது தமிழக பாரம்பரிய விழாவாகக் கொண்டாடுகிறது. இது மிகவும் பழமையான பண்டிகை மற்றும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழர்களிடையே இவ்விழா மிகவும் முக்கியமானது, ஒவ்வொரு தமிழனும் இந்த மாபெரும் உலகில் எங்கிருந்தாலும் கொண்டாட விரும்புகின்றான்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம், தமிழ்நாடு முழுவதும் கார்த்திகைத் தீபத் திருவிழா ஒரு பாரம்பரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு. தற்போது தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் கார்த்திகைத் தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

கார்த்திகைத் தீபவிழா தமிழர்களுக்கு ஒரு முக்கிய விழாவாகும். இந்த உலகத்தில் தமிழர்கள் எங்கெல்லாம் பரவியிருக்கிறார்களோ அங்கெல்லாம் இந்த பாரம்பரிய விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

கார்த்திகைத் தீபத் திருவிழாவின் தொன்மையை இந்து சமய புராணங்களில் இருந்து அறியலாம். இந்து சமயத்தின் மிகவும் முக்கியமான மற்றும் பழைய புனித நூல் ஒன்றில் கார்த்திகைத் தீபத் திருவிழா எவ்வாறு தொடங்கியது என்று பின்வருமாறு கூறுகிறது.

அக்காலத்தில் இந்து சமயத்தின் முக்கிய கடவுள்களான மகா விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கும் இடையில் யார் பெரியவர் என்பதில் ஒரு பெரிய சண்டை நடந்தது. பிரம்மாவை விட தாம் தான் வலிமையானவர் என்று மகா விஷ்ணுவும், மகா விஷ்ணுவை விட தாம் தான் வலிமையானவர் என்று பிரம்மாவும் நினைத்துக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கிடையே சண்டை தொடர்ந்தது.

இந்த சண்டையைப் பார்த்த சிவபெருமான், இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்து, அவர்கள் இருவரின் முன்பாக தாம்தான் பெரியவர் என்பதை நிரூபிக்க எண்ணினார். எனவே ஒரு மிகப்பெரிய நெருப்பு வடிவில் அவர்கள் இருவரின் கண் முன்பாகத் தோன்றி அவர்கள் அந்த நெருப்பின் மேல் உச்சியையும் மற்றும் நெருப்பின் அடிப்பாகத்தையும் சென்றடைய வேண்டுமென்று ஒரு சவாலை முன்வைத்தார்.

இந்த சவாலை ஏற்றுக் கொண்ட மகா விஷ்ணு, ஒரு பன்றி அவதாரம் எடுத்து, பூமிக்கடியில் சென்று அந்த நெருப்பின் அடிப்பகுதியை சென்றடைய பெருமுயற்சி செய்தார். ஆனால் அவருடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே சிவபெருமானிடம் திரும்பி வந்த அவர் தன்னால் நெருப்பின் அடிப்பகுதியை சென்றடைய முடியவில்லை என்று தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

பிரம்மா ஒரு அன்னப் பறவையின் அவதாரம் எடுத்து, மிக உயர்ததில் பறந்து சென்று, நெருப்பின் உச்சிப் பகுதியை அடைய முயற்சி செய்தார். ஆனால் அவருடைய முயற்சியும் தோல்வியில் முடிந்தது. சிவபெருமானிடம் திரும்பி வந்த அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதன் மூலம் பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோரை விட தாம் தான் பெரியவர் என்பதை சிவபெருமான் நிரூபித்து அவர்களின் சண்டைய ஒரு முடிவுக்கு கொண்டு வந்தார்.

சிவபெருமான்தான் பூமியின் முக்கிய கடவுள் என்றும் அதனால் மற்ற கடவுள்கள் தங்களிடையே யார் பெரியவர் என்று சண்டையிட்டுக் கொள்வதில் பயனில்லை என்பதையும் நிரூபித்தார். பின் திருவண்ணாமலைப் பகுதியில் சிவபெருமான் ஒரு பெரிய மலை வடிவில் தோன்றினார். அந்த மலை அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலை மற்றும் அருணாச்சலம் என்ற பெயர்களுக்கு தூய நெருப்பு மலை என்று பொருள்.

திருவண்ணாமலையில் உள்ள அந்த மலையில் சிவபெருமானுக்கு ஒரு கோயிலைக் கட்டினர். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் இந்த மலை மீதுள்ள கோயிலில் மிகப் பெரிய தீபம் ஏற்றப்பட்டு கார்த்திகைத் தீபத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தீபத்திற்கும் முருகப் பெருமானுக்கும் தொடர்பு இருப்பதாக புராணக் கதை ஒன்று கூறுகிறது.

சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் 6 குழந்தைகளாக அவதாரம் எடுக்கிறார். இந்த 6 குழந்தைகளும் 6 கிருத்திகை நட்சத்திரங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் கந்தனின் 6 அவதாரங்கள் என்று கருதப்படுகின்றனர்.

கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று பார்வதி தெய்வம் இந்த 6 குழந்தைகளையும் ஒரே குழந்தையாக ஒருங்கிணைக்கிறார். இதன் மூலம் கார்த்திகேயனுக்கு (முருகப் பெருமானுக்கு) 6 முகங்கள் கிடைக்கின்றன. அதனால் முருகப் பெருமானுக்கு ஆறுமுகம் என்ற பெயரும் கிடைக்கிறது.

கார்த்திகைத் தீபத் திருவிழா ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. இந்த திருவிழா எப்போது தொடங்கியது என்பதற்கான தெளிவான குறிப்புகள் பழங்கால தமிழ் இலக்கியங்களில் ஒரு சில குறிப்புகள் காணப்படுகின்றன.

பழைய தமிழ் இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு, கார்த்திகைத் தீபத் திருவிழாவைத் தீபங்களின் திருவிழா என்று குறிப்பிடுகிறது. அகநானூறு சங்க காலத்தைத் சேர்ந்த இலக்கியமாகும்.

அகநானூறு கி.மு. 200 முதல் கி.பி. 300 காலப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றியக் குறிப்புகளைத் தருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்த மிக முக்கியமான புலவரான அவ்வையார் அவர்களும் தனது பாடல்களில் கார்த்திகைத் தீபத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கின்றார்.

திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் அண்ணாமலையார் மலை சிவபெருமானின் மிகப் பெரிய இருப்பிடமாகக் கருதப்படுகிறது. கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று மாலை 5 மணி அளவில் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றும் போது, தாங்கள் சிவபெருமானோடு ஐக்கியமாகிவிடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

மேலும் மகா தீபம் ஏற்றும் நேரம் சிவபெருமான தமது அளவற்ற ஆசீர்வாதங்களைத் தமது பக்தர்கள் மீது பொழிந்தருள்கிறார். அந்த நேரத்தில் பக்தர்கள் அவரை மிகவும் பக்தியுடன் வழிபடுகின்றனர்.

கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மகா தீபம் ஏற்றும் போது கூடியிருக்கும் பக்தர்கள் அனைவரும் சிவபெருமானின் பெயரை உரக்கச் சொல்லி, தங்கள் பிரச்சினைகளைக் களைந்து, தம் வாழ்வில் அமைதியைத் தருமாறு வேண்டுகின்றனர்.

கார்த்திகை அன்று தீபம் ஏற்றும் நிகழ்வானது உலகத்தில் உள்ள இருளுக்கு முடிவு கட்டுவது என்ற அடையாள முறை அர்த்தத்தையும் கொண்டுள்ளது. பக்தர்கள் தாங்கள் ஏற்றும் விளக்குகளை சிவபெருமான் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அவ்வாறு சிவபெருமான் பக்தர்களின் விளக்குகளைப் பார்த்து அவர்களின் பக்தியைப் புரிந்து கொண்டு, வரும் காலங்களில் அவர்களை எல்லா தீங்குகளில் இருந்தும் காப்பார் என்று நம்புகின்றனர்.

கார்த்திகைத் தீபத் திருவிழா அன்று திருவண்ணாமலையில் நடக்கும் வழிபாட்டு சடங்குகளை பக்தர்கள் தவறாது பார்க்க வேண்டும். பின் பக்தியுடன் வழிபட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

அவ்வாறு செய்தால் அவர்கள் சிவபெருமானோடு மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்வார்கள். சிவபெருமானின் அளவற்ற அருளைப் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…

3 weeks ago

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…

4 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago