63 நாயன்மார்கள்

கண்ணப்ப நாயனார் வரலாறு

தாய், தந்தை அற்றவர், பிறப்பு, இறப்பு என அனைத்தையும் கடந்தவர் ஈசன் என குறிப்பிடுகிறோம்.
உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவளிக்கும், படியளப்பவனாக திகழ்கிறார். அப்பேர்பட்ட இறைவனை திருமால், பிரம்மன் என அனைவரும் வணங்கக் கூடியவராக உள்ளார்.

குறிப்பாக சிவ பெருமானை ஏற்றுக் கொண்டு அவன் தான் எல்லாம் என நினைத்து அவனிடம் முக்தியை வேண்டி விரும்பி அவனின் புகழை பரப்பியவர்கள் தான் நாயன்மார்கள்.

பெரிய புராணம் என்னும் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாக) இடம் பெற்றுள்ளது. இந்நாயனார் வரலாற்றைச் சேக்கிழார், 186 விருத்தப் பாக்களினால் பாடியுள்ளார்.திண்ணனார் சிவலிங்கத் திருவுருவத்தின் கண்ணிலிருந்து இரத்தம் கசிந்ததைக் கண்டு, தன் கண்ணைத் தோண்டி அப்ப இறைவனால் கண்ணப்பன் என்று அழைக்கப்பட்ட செய்தியினை இக்கதை விளக்குகின்றது.

அப்படிப்பட்ட நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரைச் சிவ பெருமான் தந்தையாக ஏற்றார் என்றால் நம்ப முடிகிறதா?… வாருங்கள் கண்ணப்ப நாயனாரின் அன்பைப் பார்ப்போம்…

வேடர் குலத்தில் பிறந்தவர் கண்ணப்பர். இவரின் இயற் பெயர் திண்ணன். இவர் வேடர் என்பதால், தான் வேட்டையாடிய மிருகங்களின் மாமிசத்தை சிவலிங்கத்தின் முன் வைத்து மனமுருகி வழிபடும் வாடிக்கையை வைத்திருந்தான்.

ஒருநாள் கண்ணப்பனின் பக்தியை சோதிக்க விரும்பினான். திண்ணன் தினமும் வணங்கி வந்த சிவலிங்கத்தில், அவன் வணங்கிக் கொண்டிருந்த பொழுது, ஒரு கண்ணிலிருந்து ரத்தம் வடியத் தொடங்கியது.

இதைப்பார்த்ததும் பதறிப் போன கண்ணப்பர், ரத்தத்தை துடைத்துப் பார்த்தார், இருப்பினும் பலனில்லாமல் ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. இதையடுத்து அவரின் கண்ணை எடுத்து இறைவனுக்கு வைக்க முடிவெடுத்து, ஒரு அம்பை எடுத்து தன் ஒரு கண்ணை எடுத்து ரத்தம் வழியும் கண்ணில் வைத்தார்.

சிறிது நேரத்தில் மற்றொரு கண்ணிலிருந்தும் ரத்தம் வடியத் தொடங்கியது. இதைப் பார்த்து மீண்டும் வாடிப்போன திண்ணன், தன் மறுகண்ணையும் எடுத்து லிங்கத்திற்கு வைக்க முடிவு செய்தான்.

இதையடுத்து, இரண்டாவது கண்ணையும் எடுத்தால், சிவபெருமானின் ரத்தம் வடியும் கண் மீது வைக்க முடியாது என்பதால், இறைவனிடம் வேண்டிக் கொண்டு, தன் கால் விரலால் சிவலிங்கத்தின் கண் மீது வைத்துக் கொண்டு, மற்றொரு கண்ணை அம்பின் உதவியால் எடுக்க முயன்றான்.

சிவலிங்கத்திலிருந்து நீண்ட கை, திண்ணனை ‘நில்லு கண்ணப்பா’ என தடுத்தது. அதாவது கண் அப்பா என ஈசன் அழைத்து, திண்ணனை தன் தந்தையாகவே ஏற்றுக் கொண்டார்.

இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் காளஹஸ்தி திருக்கோயில். இதன் காரணத்தால் இங்குள்ள காளத்தியப்பர், காளத்தீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் புரிகிறார்.

இந்த நிகழ்வு நடந்ததாக, கண்ணப்பர் வழிபட்ட சிவ லிங்கம், காளஹஸ்தி மலை மீது இன்று கண்ணில் ரத்தம் வழிவது போன்ற சிவ லிங்கம் காணப்படுகிறது. அருகிலேயே கண்ணப்பரின் சன்னதியும் உள்ளது.

குறிப்பு :

பொத்தப்பி நாடு : ஆந்திர மாநிலத்தின் இப்போதைய கடப்பை மாவட்டத்தில் புல்லம் பேட்டை வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும்.

உடுப்பூர் : இவ்வூர் குண்டக்கல் – அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம்பேட்டைக்கு அருகில் உள்ளது. உடுக்கூர் என இன்று வழங்கப்படுகிறது.

 கதைமாந்தர்கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இடம்பெறும் கதை மாந்தர்கள். நாகன், தத்தை, திண்ணன், நாணன், காடன், வேடுவர்கள், தேவராட்டி, குடுமித் தேவர், சிவ கோசரியார்.

shiva

Recent Posts

மணிபூரக மஹா ரகசியம்

மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…

3 weeks ago

திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம்

தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…

3 weeks ago

சிவன் ஏன் உயர்ந்த கடவுள் தெரியுமா

சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…

3 weeks ago

பணத்தை பல மடங்காக அள்ளித்தரும் கிழமை

செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…

3 weeks ago

பித்ரு தோஷம் நீங்க எளிய பரிகாரம் – Pithru Dosh

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…

4 weeks ago

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன்

ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…

4 weeks ago