Anmegam

தேவாரப்பாடல்கள் பெற்ற சிவாலய சிறப்புக்கள்

தேவாரப்பாடல்கள் பெற்ற சிவாலயங்களின் சிறப்புக்கள்

தேவாரப்பாடல்கள் பெற்ற சிவாலய சிறப்புக்கள் வரிசையில் 86 வதாக நாம் திருவாட்போக்கி ஸ்ரீ ரத்னகிரீசர் மற்றும் ஸ்ரீ சுரும்பார்குழலி திருக்கோவிலை பற்றி காண இருக்கிறோம்.

தீர்த்தம்:காவிரி:இத்தலத்திற்கு நம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், இந்திரன், சயந்தன், வாயு, ஆதிசேஷன், முதலானோர் வந்து நம் இறைவனை வணங்கி சிறப்பு பெற்றுள்ளனர்.

இத்தலத்தை மக்கள் தற்போது ஐயர் மலை என்று அழைக்கிறார்கள், மாணிக்கம் வேண்டி வந்த ஆரிய மன்னன் ஒருவனுக்கு இறைவன் தொட்டி ஒன்றை காட்டி அதில் காவிரி நீர் கொண்டு நிரப்ப சொன்னார், அது எப்படியும் நிரப்ப முடியாமல் போனதால் கோவம் கொண்ட மன்னன் தன் வாளை எடுத்து லிங்கத்தின் மீது வீச உடனே அவன் கேட்ட மாணிக்கம் கிடைத்தது.

ஆனால் அம்மன்னன் அதை விரும்பாது தான் செய்த தவறை மன்னிக்க நம் இறைவனை வேண்டி நின்றான், மன்னன் வெட்டியதால் லிங்கத்தின் மீது வெட்டுப்பட்ட தழும்பை இன்றும் நாம் காணலாம்.

இதனால் முடித்தழும்பர் எனும் பெயரும் இத்தல இறைவன் பெற்றுள்ளார், இத்தலத்தில் அகத்தியர் பெருமான் நண்பகலில் வழிபட்டதால் இங்கு நண்பகல் தரிசனம் சிறப்பு என்பர் .

இதனால் இவ்விறைவனுக்கு மத்தியான சுந்தரர் என்ற பெயரும் நிலைத்திற்று, மூலவர் சுயம்பு திருமேனி 1140 படிகளை ஏறிச்சென்றே இறைவனை தரிசிக்க வேண்டும் சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசி கொப்பரை எனும் நீர்தொட்டி உள்ளது, மாதந்தோறும் பக்தர்கள் மூலிகைகள் நிறைந்த இம்மலையை கிரிவலம் செய்கின்றனர்.

பல பல சிறப்புக்கள் கொண்ட திருக்கோவில் இது, அமைவிடம்: குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இத்தலம் உள்ளது தொடர்புக்கு: 04323 – 245522