AnmegamGeneralHistory's

சதுர்த்தியும் சந்திரனும்

சதுர்த்தியின் சிறப்பு:

ஒரு சமயம் விநாயகர் லோக சஞ்சாரம் செய் யும் வேளையில், தன் அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திர னை நோக்கி, “நீ தேய்ந்து மறையக் கடவது” என்று சபித்தார்.

பின், தவறு க்கு வருந்திய சந்திரன், விநாயக ரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, “பாலசந்திரன்’ என்ற பெயரு டன் அருள் பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையத் தந்தார். அவ்வாறு சந்திர பகவா ன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தியா கும். ஆகவே, சதுர்த்தி திதி விநயாகருக்கு உகந்ததாயிற்று.


‘சங்கட ஹர’ என்றால் சங்கடத்தை நீக்குதல். உலக வாழ்வில் நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லா இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவ தால் இந்த விரதம் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று போற்ற ப்படுகிறது.


புராணக் கதை:

அங்காரக பகவான், விநாயகரை பூஜித்தே கிரக பதவி அடைந்தார். ஆதலால், செவ்வாய் க் ழமையன்று வரும் சங்கட ஹர‌ சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்றே போற்ற படுகிறது.

‘கிருத வீர்யன்’ எனும் மன்னனுக்கு நெடு நாட்களாகக் குழந்தைப் பேறில்லை. ஒரு நாள் அவன் கனவில் அவன் தந்தை தோன்றி, ‘இந்த ஓலை சுவடியில் குறிப்பிட்டி ருக்கும் விரதத்தை செய்தால் குழந்தைப் பேறு அடை வாய்’ என்று சொல்லி மறைந்தார். விழித்துப் பார்த்தால் அவன் கையில் ஒரு சுவடிக்கட்டு இருந்தது.

மறு நாள், வேத பண்டிதர்கள் அதைப் படி. த்து, ‘மன்னா, இந்த விரதம் விநாயகரை வழிபட்டு ச் செய்ய வேண்டிய அங்காரக சதுர்த்தி எனும் விரதம். இதன் விவரங்க ளைப் பற்றி பிரம்ம தேவர் அருளிய விஷ யங்கள் இந்தச் சுவடியி ல் இருக்கின்றன’ என்று கூறி விவரிக்க, மன்னனும் அங்கார க சதுர்த்தி அன்று விரதம் துவங்கி விரதம் இருந்தான்.

விரதப் பலனாக, அவனுக்கு ஆண் குழந் தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு கைக ளோ, கால்களோ இல்லை. ஆனால் மனம் தளராமல் ‘கார்த்த வீர்யன்’ எனப் பெயரிட்டு, அக்குழந்தையை வளர்த்த கிருத வீர்யன், உரிய வயதில் அக்குழந் தைக்கு ஸ்ரீ கணேச மூல மந்திரத்தை உபதேசம் செய்தான்.

இடைவிடாது அந்த மூலமந்திரத்தை, பன்னிரு ஆண்டுகள் கார்த்த வீர்யன் ஜபிக்க, அதன் பலனாக, விநாயகர் அவனுக்கு தரிசனம் தந்து, ஆயிரம் கை கால்களையும் அர்ஜூன னுக்கு நிகரான பலத்தையும் அருளினார். அதனால் அவனுக்கு ‘கார்த்த வீர்யார்ஜூனன்’ என்றே பெயர் ஏற்பட்டது.
பின் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அருளால், அனுக் கிரக சக்தியையும் பெற்றான்.

இன்றும் ஏதேனும் பொருட்கள் காணாமல் போனால், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனரை வேண்டி, ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூன மந்திரம் ஜபிக்க, அவை திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சூரசேனன் எனும் மன்னன், தான் சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருந்ததோடு தன் நாட்டு மக்களையும் விரதம் அனுஷ்டிக்கச் செய்து எல்லா வளங்களையும் நலங்க ளையும் பெற்றான்.

விநாயகப் பெருமான, ஞானகாரகனான, கேது பகவானுக்கு அதிதேவதையாதலால் சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வணங்க, கேதுகிரகத்தால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.


விநாயகா போற்றி… விக்னேஸ்வரா போற்றி….