ஒவ்வொரு மாதத்திலும் வரும் அஷ்டமி திதி கால பைரவருக்குரிய முக்கியமான வழிபாட்டு நாளாக கருதப்படுகிறது. வளர்பிறை அஷ்டமியை விட, தேய்பிறை அஷ்டமியில் அதிகமானவர்கள் விரதம் இருந்து கால பைரவரை வழிபடுவது உண்டு.
கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை, தீமைகள், தாங்க முடியாத துன்பங்கள் ஆகியவை நீங்குவதற்காக பலரும் கால பைரவரை வழிபடுவது உண்டு. கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் தான் கால பைரவர் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இதை கால பைரவர் ஜெயந்தி என கொண்டாடுகிறோம்.
இந்த ஆண்டு கால பைரவர் ஜெயந்தி அல்லகு பைரவாஷ்டமி நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை வருகிறது. நவம்பர் 22ம் தேதி இரவு 10.31 மணிக்கு துவங்கி, நவம்பர் 23ம் தேதி இரவு 11.45 மணி வரை அஷ்டமி திதி உள்ளது.
இந்த நாளில் கால பைரவரை வழிபடுவதால் பாவங்கள், பயம், தடைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட முடியும். கால பைரவர் ஜெயந்தி அன்று கால பைரவரை வழிபடுவதால் தலையெழுத்து மாறும். நம்முடைய கெட்ட நேரம் என்பது மாறி, நல்ல காலம் பிறக்கும் என்பதாக ஐதீகம். நீண்ட காலமாக தீர்க்க முடியாத துன்பங்கள், நோய்கள், பல விதங்களில் தடைகள் சந்திப்பவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது சிறந்தது.
நாளை பைரவ அஷ்டமி. ஏவல், பில்லி, சூனியம், போன்ற அமானுஷ்ய சக்திகளால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் நாளை பைரவருக்கு இந்த விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், பிரச்சனைகள் உடனடியாக தீரும்.
கால பைரவர் ஜெயந்தி அன்று பக்தர்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராடி, வீட்டை சுத்தம் செய்து, கால பைரவர் படம் அல்லது வீட்டில் உள்ள சிவ பெருமானின் படத்திற்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
இனிப்புகள், மிளகு சேர்த்த வடை ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். கால பைரவருக்கு உரிய அஷ்டகம், மந்திரங்களை பாராயணம் செய்து அவரை மனதார, நம்முடைய குறைகளை சொல்லி முறையிட்டு வழிபட வேண்டும். மாலையிலும் வீட்டில் விளக்கேற்றி வைத்து கால பைரவருக்கு பூஜைகள் செய்ய வேண்டும்.
பைரவருக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு.
“ஓம் கால பைரவாய நமஹ”
கால பைரவர் காயத்ரி:
“ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்”
கால பைரவர் ஜெயந்தி அன்று மாலையில் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று கால பைரவர் சன்னதியில் பஞ்சு திரியிட்டு நான்கு முக தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அல்லது சற்று பெரிய அகலில் நான்கு பஞ்சு திரிகளை ஒன்றாக திரித்து கால பைரவருக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அன்றைய தினம் கால பைரவருக்கு அபிஷேக பொருட்கள், சந்தனம் ஆகியவை வாங்கிக் கொடுப்பதும், சந்தன காப்பிடுவதும் சிறப்பான ஒன்றாகும். பைரவரின் வாகனமான நாய்களுக்கு அன்றைய தினம் உணவு வழங்குகிறது கால பைரவரின் அருளை பெற்றுத் தரும்.
கால பைரவரின் மனம் மகிழும் படி அன்றைய தினம் வழிபட்டால் அவர் நம்முடைய கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றுவார் என்பது நம்பிக்கை.
பொதுவாக கடவுளரை அக்கடவுளருக்குரிய திதி மற்றும் நட்சத்திரங்களில் வழிபாடு செய்ய வேண்டும். இது கடவுள் வழிபாட்டில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஆகும். அவ்வாறு வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானதாகும்.
அவ்வாறு நாம் வழிபட்டால் கடவுளின் அருளும் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் நமது கர்ம வினைகள் நீங்கி நமது நியாயமான கோரிக்கைகளும் நிறைவேறும்.
அவ்வாறு வழிபாடு செய்வதில் நட்சத்திரங்களில் பொதுவாக சந்தேகங்கள் வருவதில்லை.
ஆனால் திதிகளில் சந்தேகங்கள் வருவது உண்டு. ஏனெனில் திதிகளில் வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம். நாம் இரண்டு திதிகளிலும் வழிபாடு செய்வதே மிகவும் சிறப்பானது.
உதாரணமாக பைரவர் வழிபாட்டினை எடுத்துக் கொள்வோம். பைரவருக்குரிய திதி என சிறப்பிக்கப்படும் திதி அஷ்டமி திதி ஆகும். இதில் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என இரண்டு அஷ்டமி திதிகள் உள்ளன.
இவ்விரண்டு அஷ்டமி திதிகளுமே பைரவர் வழிபாட்டிற்கு உரியவை தான் என்பதில் ஐயமில்லை. அவற்றினை பயன்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே உண்டு.
முதலில் தேய்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தீர்க்க வேண்டிய துன்பங்களை தீர்க்குமாறு வேண்ட வேண்டும். 1தேய்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமது துன்பங்கள் அனைத்தும் தேய்ந்து அழிந்து போகும். எக்காரணம் கொண்டும் நம்முடைய தேவைகளை வேண்டுதல் கூடாது.
இப்போது வளர்பிறை அஷ்டமியை எடுத்துக் கொள்வோம். வளர்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்யும் போது நாம் பைரவரிடம் நமக்கு தேவையானவற்றை தருமாறு வேண்ட வேண்டும். 1வளர்பிறை அஷ்டமி திதிகளில் நாம் இவ்வாறு வேண்டும் போது நமக்கு தேவையானவை அனைத்தும் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும். 1எக்காரணம் கொண்டும் நம்முடைய துன்பங்களை தீர்க்குமாறு வேண்டுதல் கூடாது.
நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை திதிகளில் ஆரம்பம் செய்து வளர்பிறை திதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும். தேய்பிறை திதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் தொடங்கும்.
பின்னர் வளர்பிறை திதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனை எந்த கடவுள் வழிபாட்டிற்கும் பின்பற்றலாம். தவறில்லை.
“விரிந்த பல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்து உமை அஞ்சக் கண்டு ஒண் திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே.”
இந்த பாடலில் கால பைரவரின் திருக்கோலம் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலை ஓதும் அடியார்கள், தங்கள் அச்சம், இடர், வறுமை, பிணி முதலியன நீங்கப்பெற்று, செல்வம் நிறைந்த வாழ்க்கை வாழ்வார்கள் என்று நம்பப்படுகின்றது.
பலவாறு விரிந்த ஒளியினை உடைய சூலத்தையும், ஓசையை உள்ளடக்கிய தமருகம் எனப்படும் உடுக்கையையும் கையில் ஏந்தி அழகிய வடிவம் கொண்ட கால பைரவ மூர்த்தியாக கோலம் கொண்ட சிவபெருமான், தன்னை அழிப்பதற்காக தாருகவனத்து முனிவர்கள் ஏவிய யானையினை அழித்தார்.
யானை சிவபெருமானை நெருங்கியதையும், அதன் தோலினை சிவபெருமான் உரித்த பின்னர் அந்த தோலினைப் போர்வையாக உடலின் மீது போர்த்துக் கொண்டததையும் கண்ட பார்வதி தேவி மிகவும் அச்சம் எய்தினாள்.
தேவியின் பயத்தைக் கண்ட சிவபெருமான் தனது பவளம் போன்று ஒளி திகழும் வாய் மலர்ந்து சிரித்தார். இவ்வாறு சிறிதும் அஞ்சாமல் வீரச்செயல் புரிந்தவர் சேறைப் பதியில் உள்ள செந்நெறி எனப்படும் கோயிலில் வாழ்கின்ற எம்பெருமான் ஆவார்.
தென்னாடுடைய சிவனே போற்றி.!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.!!
மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…
தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…
சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…
ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…