இன்று திருவாதிரை மற்றும் ஆருத்ரா தரிசனம்
மார்கழி திருவாதிரை விரதம்
திருவாதிரை நோன்பு (விரதம்) என்பது திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமி நாளில் உபவாசம் இருந்து நோற்கும் ஒரு நோன்பாகும்.
மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று (திருவாதிரை தரிசனம்) காட்சி தரும் கடவுளை கண்டு களித்தால் வீழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். திருவாதிரை தரிசனத்தை, ஆருத்ரா தரிசனம் என்றும் சொல்வார்கள். அன்றைய தினம் சகல சிவாலயங்களிலும் நடராஜருக்கு அபிஷேகம் செய்வதும், ரிஷப வாகனத்தில்
திருவெம்பாவை வழிபாட்டுக்குரிய பத்துத் தினங்களின் இறுதி நாளாகவும் மார்கழி திருவாதிரை அமைகின்றது. சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். இவ்விரதம் சிவனுக்கு மிகவும் உகந்தது. இதனை கொண்டுதான் சிவபெருமானை ஆதிரையின் முதல்வன் என்றும் ஆதிரையான் என்றும் கூறுவர்.
ஆருத்ரா தரிசனம்
கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த சிவன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கை, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை. அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தார்.
அதனால் மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று நடராஜருக்குச் சிறப்பு வாய்ந்தது. அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும் சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் ஆரோகணித்து தேரில் வீதி வலம் வரும் காட்சி அற்புதக் காட்சியாகும். இதைத்தான் ஆருத்ரா தரிசனம் என்று கூறுவர்.
ஆருத்ரா என்பது ஆதிரையைக் குறிக்கும் சொல். இக்காட்சியைக் கண்டு தரிசிக்க பிறநாடுகளில் இருந்து அடியார் கூட்டம் தொன்று தொட்டு இங்கு செல்வது வழக்கம். சிதம்பரத்திலுள்ள நடராஜப் பெருமானைத் தரிசித்தால் முக்தி கிடைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
மார்கழி மாதம் திருவாதிரை, திருவெம்பாவை நோன்பினாலும், விநாயகர் சஷ்டி விரதத்தாலும் பெருமை பெறுகின்றது. சொர்க்க வாயிலில் ஏகாதசி விரதம் மார்கழியில் தான் கடைபிடிக்கப்படுகின்றது.
கண்ணன் கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். ஆண்டாளும் தனது திருப்பாவையில் மார்கழி மாதத்து மதி நிறைந்த நன்னாள் என வர்ணிக்கின்றார்.
சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள். சிவபெருமான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.
அனைவருக்கும் ஆருத்ரா தரிசனம் நல்வாழ்த்துக்களுடன் தித்திக்கும் புதன்கிழமை விடியல் வணக்கங்கள்
மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…
தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…
சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…
ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…