அமர்நீதியார் குருபூசை ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டு தோறும் வழிபாடு செய்யப்படுகிறது.
அமர்நீதி நாயனார், சோழவள நாட்டில் பழையாறை என்ற பகுதியில் பிறந்தவர். வணிக குலத்தில் பிறந்தவர். சிவ பக்தியில் திளைத்தவர்.! பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு, பருத்தி ஆடை போன்றவைகளை எந்த பகுதியில் சிறப்பாக விளையுமோ அந்தப் பகுதிகளுக்கே! சென்று வாங்கி வந்து முறையான விலையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தில் இறைவனுக்கும், அவர்களின் அடியவர்களுக்கும் தொண்டுகள் புரிந்துவந்தார்.
சிவனடியார்களுக்கு துறவிகள் அரைஞாணுக்கு பதிலாக கட்டும் கீழாடை மற்றும் கோவணம் முதலானவற்றை வழங்கி வந்தார். சிவனடியாருக்குச் செய்யும் தொண்டு! சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார்.அவர், திருநல்லூர் எனும் தலத்திற்கு சென்று அங்குள்ள ஈசனை! வழிபடுவார். ஈசனின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பார். திருவிழா வந்துவிட்டால், அன்னதானம் வழங்குவார். அடியவர்களுக்கு ஆடைகள் வழங்குவதற்காக திருநல்லூரில் மடம்! ஒன்றை நிறுவினார். அதன்மூலம் அடியவர் களுக்கு நாள்தோறும் அமுதளித்தும், ஆடைகள் தானம் செய்தும் தொன்டுகள் புரிந்து வந்தார்!
நாளடைவில் குடும்பத்துடன் திருநல்லூரிலேயே குடியேறினார். அமர்நீதி நாயனாரின் அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் ஈசன்! அதற்காக ஒரு நாடகத்தையும் நடத்தினார்.பிரம்மச்சாரி போல் சிவனடியாராக திருநல்லூர் திருத்தலத்திற்கு வந்தார் சிவனார். அவரை வணங்கினார் அமர்நீதி நாயனார். ‘சுவாமி! இதுவரை இது போன்றதொரு தோற்றமுடைய அடியவரை நான் கண்டதில்லை. உங்களை கண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’ என்றார் அமர்நீதி நாயனார்.
அடியவர் உருவில் வந்த இறைவனோ, ‘அன்பனே! உன்னுடைய வள்ளல் தன்மையை அறிவேன். உன்னைப் பார்க்கவும் உடைகள் வாங்கவுமே வந்தேன்’ என்றார்.
‘சுவாமி! இத்திருமடத்தில் சிறந்த அந்தணர்களால் அமுது செய்யப்படுகிறது. அதனை தாங்கள் உண்டு பசியாற வேண்டும்’ என்று வேண்டினார் அமர்நீதி நாயனார். ‘அப்படியே ஆகட்டும். நான் போய் காவிரியில் நீராடி வருகிறேன். ஒருவேளை மழை வந்து விட்டால் என்னிடம் உள்ள கோவணம் நனைந்து! விடும். இதனை நான் வந்த பின் கொடுப்பாயாக. கோவணத்தின் பெருமை உனக்கு தெரியும்தானே. பத்திரமாக வைத்திரு’’ என்று சொல்லிவிட்டு, தண்டில் முடிந்திருந்த இரண்டில் ஒரு கோவணத்தை! அவிழ்த்துக் கொடுத்தார். அமர்நீதி நாயனார் பெற்றுக் கொண்டார்.
கங்கையை தலையில் சூடியிருக்கும் இறைவன், காவிரியில் நீராடும் பொருட்டு அங்கிருந்து சென்றார். அந்த வேளையில் அடியவர் கொடுத்த கோவணத்தை ! தனியொரு இடத்தில் வைத்தார் அமர்நீதி நாயனார். அந்த கோவணத்தை அங்கிருந்து மறைத்து விட்டார் ஈசன்!சிறிது நேரம் கழித்து அடியவர், திருமடம்! நோக்கி வந்தார். அப்போது அவர் முழுவதுமாக மழையில் நனைந்ததுபோல் காணப்பட்டார். அவரது உடைகளும், தண்டில் வைத்திருந்த மற்றொரு கோவணமும் நீரில் நனைந்திருந்தது. ‘மழையின் காரணமாக கோவணம் நனைந்து விட்டது. எனவே உன்னிடம் கொடுத்த கோவணத்தை எடுத்து வா!’ என்று கூறினார்.
அமர்நீதி நாயனார், தனியறைக்குள் சென்று வைத்த இடத்தில் கோவணத்தைத் தேடினார். இருந்தால் தானே கிடைப்பதற்கு. திருமடத்தில் இருந்த அனைவரிடமும் விசாரித்தார், ஆனால் கோவணம் கிடைக்கவில்லை. பதறித் துடித்தார்! அமர்நீதி நாயனார். பிறகு, அடியவர் ஈரத்துடன் நிற்கிறாரே என்று எண்ணி! தன்னிடம் இருந்ததில் சிறந்த கோவணத்தை எடுத்துக் கொண்டு அடியவரை நோக்கிச் சென்றார்.‘ஐயனே! தாங்கள் தந்த கோவணம் எப்படியோ காணாமல் போய்விட்டது. மன்னிக்க வேண்டும். வேறு ஒரு நல்ல கோவணம் கொண்டு வந்திருக்கிறேன். ஈரக் கோவணத்தை களைந்து விட்டு, இதனை! உடுத்திக் கொள்ளுங்கள். என்னுடைய பிழையைப் பொறுத்தருளுங்கள்’ என வேண்டினார்.
அவ்வளவுதான். அடியவர் வெகுண்டார். ஆவேசத்துடன் திட்டித் தீர்த்தார். கலங்கிப் போன அமர்நீதி நாயனார்! ‘அறியாமல் நடந்துவிட்டது. அதற்கு பதில், உயர்ந்த பட்டாடைகளும், நவமணிகளும், பொன்னும், பொருளும் தருகிறேன்’ என்றார். இதைக் கேட்டு இன்னும் கோபமானார்! அடியவர். ‘பொன்னும், நவமணிகளையும் வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். எனக்கு ஒரு பயனும் இல்லை. கோவணத்திற்கு நிகரான கோவணம் தந்தால் போதும். இதோ! என்னிடம் ஈரமாக உள்ள இந்த கோவணத்தை தராசில் ஒரு பக்கத்தில் வைத்து, அதற்கு நிகராக கோவணத்தை தா!’ என்றார் அடியவர்.
ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்ட அமர்நீதி நாயனார், தராசின் ஒரு பக்கத்தில் அடியவரின் கோவணத்தை! வைத்தார். இன்னொரு தட்டில் தன்னிடம் உள்ள கோவணத்தை தராசு தட்டில் வைத்தார். ஆனால் தராசு சமமாவதற்கு பதிலாக, அடியவரின் தட்டு கீழ்நோக்கிச் சென்றது. திகைத்துப் போன அமர்நீதியார்! அடியவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த எல்லாக் கோவணங்களையும் ஒவ்வொன்றாக தட்டில் வைத்து நிரப்பினார். ஆனாலும் அடியவர் தட்டு அமிழ்ந்தே இருந்தது.
‘சுவாமி! என்னிடம் இருந்த கோவணத்தை எல்லாம் வைத்தும் தட்டு சமமாகவில்லை. ஆகவே பட்டாடைகளை வைக்க அனுமதி தர வேண்டும்’ என்றார் அமர்நீதி நாயனார்.
அதற்கு சம்மதித்தார் அடியவர். உயர்ந்த பட்டாடைகளையும் தராசு தட்டில் வைத்தார். அப்போதும் தராசு சமமாகவில்லை! நவரத்தினங்கள், பொன்னும் பொருளும் வைத்தும் யாதொரு பயனும் இல்லாமல் போய்விட்டது. வைப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலை வந்து விட்டது.
உடலும் மனமும் தளர்ந்தார் அமர்நீதி நாயனார். ‘இருந்த அனைத்தையும் வைத்தும் தராசு சமமாகவில்லை. என் மனைவி மற்றும் பிள்ளையுடன்! என்னையும் இந்த தராசு தட்டில் ஏற அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டினார். அதன்படி, மனைவியும் பிள்ளையும் தராசுத் தட்டில் ஏறியதும், ‘இதுவரை நான் செய்த அடியவர் ! அன்பில், சிறிதும் தவறாதிருந்தது உண்மையானால், இந்தத் துலாம் சமமாக நிற்கட்டும்’ என்று கூறி பஞ்சாட்சரம் ஓதினார். தட்டின் மீது ஏறினார். தராசுத் தட்டு சமமானது.
அப்போது அங்கே ரிஷபாரூடராக காட்சி தந்தார் சிவனார். அமர்நீதியார் குடும்ப சகிதமாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்! சிவனார் அவர்களை ஆட்கொண்டு அழைத்துச் சென்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானார் அமர்நீதி நாயனார்! அமர்நீதி நாயனாரின் குருபூஜை. சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் விசேஷ வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டுகள் தோறும் சிறப்பாக நடைபெறுகிறது .
மணிபூரக சக்கர மஹா ரகசியம் தடித்வந்தம் சக்த்யா திமிரபரிபந்தி ஸ்புரணயாஸ்புரந் நாநாரத்ன பரிணத்தேந்த்ர தநுஷம்தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக…
தேவார திருத்தல வரலாறு மற்றும் திருப்பதிகம் திருக்கூடலையாற்றூர் அருள்மிகு நர்த்தனவல்லபேஸ்வரர் திருத்தல திருமுறை பதிகம் இறைவர் திருப்பெயர் : நர்த்தன…
சிவலிங்க பூஜை வழிபாடு ஓம் நமசிவாய சிவாகமங்களில் சொல்லப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்வதால் ஏற்படும் பலன்கள். சிவலிங்கத்தை பூஜை செய்பவன்…
செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட மிகவும் விசேஷமான நாள். பொருளாதாரத்தில் நாம் முன்னேற்றம் அடைய முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமைகளில் முறையாக வழிபட்டால் அனைத்து…
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது.…
ஐயப்பனை தர்மசாஸ்தா என்று அழைப்பது ஏன் தெரியுமா? புலியை வாகனமாகக் கொண்டு, தவக்கோலத்தில் சபரிமலையில் அமர்ந்து அருள்பாலித்து வரும் அருட்கடல்தான்…