அகத்தியர் ஈ வடிவம் பெற்று மரகதநாதரை அபிஷேகித்த மலை
அகத்தியர் ஈ வடிவம் பெற்று மரகதநாதரை அபிஷேகித்த மலை
இத்திருக்கோவில் தரிசனம் செய்ய ஆவல் கொண்டு தரிசனம் காண முடியாமல் மனம் வருந்திய வேளையில் அகத்தியர் ஈ வடிவம் பெற்று மரகதநாதரை அபிஷேகித்த மலை
திருஈங்கோய்மலை
தேவாரப்பாடல்கள் பெற்ற திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதநாதர் திருக்கோவிலின் சிறப்புக்கள்
முனிவர்களால் வணங்கப்படும் அகத்தியமாமுனிவர் ஓர் சமயம் தீர்த்த யாத்திரையாக திருக்கேதாரம் முதல் திருராமேஸ்வரம் வரை சென்று கொண்டிருக்கையில்
இத்திருக்கோவில் தரிசனம் செய்ய ஆவல் கொண்டு வரும் வேளையில் இக்கோவில் அர்ச்சகர் பூஜை முடித்து ஆலய திருக்கதவுகளை பூட்டி சென்றுவிட்டார்.
இறைவனது தரிசனம் காண முடியாமல் மனம் வருந்திய வேளையில் அகத்தியருக்காக நம் இறைவன்,
அசரீரீ வழியே அகத்திய முனிவரே நீங்கள் ஈ வடிவம் பெற்று திருக்கதவிலுள்ள துளையின் வழியே வந்து என்னை தரிசிக்கலாம் என்று திருவாக்கருளினார்.
அதன் படியே அகத்தியர் ஈ வடிவம் கொண்டு நம் இறைவனை தரிசித்ததாக இத்தல வரலாறு கூறுகின்றது, இதனை விரிவாக கூறுவதென்றால்
அகத்தியர் ஈ வடிவம் பெற்று அங்குள்ள கானகம் சென்று தேன் கூடுகளில் உள்ள தேனை பெற்று பல்லாண்டுகள் இங்குள்ள மரகதநாதரை அபிஷேகித்து வந்தமையால் இம்மலை ஈங்கோய்மலை எனப்பட்டது.
இங்கு வீற்றிருக்கும் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வது பெரும் சிறப்பு இன்னும் இன்னும் பல சிறப்புகள் பெற்றது இத்திருக்கோவில் அச்சிறப்புக்கள் பற்றி நாளையும் தொடரும்.