63 நாயன்மார்கள்Anmegam

நாயன்மார்கள் ஏன் 63 மட்டுமே உள்ளனர் தெரியுமா?

நாயன்மார்கள் ஏன் 63வர் மட்டும்

பொதுவாக நமது தமிழ்நாட்டில் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பெரும்பாலான ஆன்மீகவாதிகள் இருந்தாலும் சிவனடியார்கள் இருந்தாலும் நாயன்மார்கள் ஆழ்வார்கள் சித்தர்கள் என்பவர்கள் தனித்துவமே.

குறிப்பாக நாயன்மார்கள் 63 மட்டும் தான் உள்ளனரா அதற்குப்பின் சிவனடியார்கள் ஆயிரக்கணக்கில் இருந்தும் ஏன் அவர்களில் யாரும் நாயன்மார்களாக உருவாகவில்லை என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் பல சிவனடியார்கள் ஆன்மீகவாதிகள் இருந்தாலும் பண்டைய காலத்தில் தான் எடுத்துக்கொண்ட செயலில் இருந்து எந்த துன்பம் வந்த போதும் கடுகளவும் மாறாத நிலைத்து நின்றவர்களே நாயன்மார்கள், செயற்கரிய செயல்களை செய்து முடித்தவர்கள் தான் நாயன்மார்கள்.

தற்போது உள்ளவர்கள் கூட செய்ய தயங்குகின்ற பல விஷயங்களை செய்து முடித்தவர்களே நாயன்மார்கள் இறைவன் மீது கொண்ட அன்பின் காரணமாக மரணத்தையும் துச்சமாக என்னை செயல்பட்டவர்கள் நாயன்மார்கள்,